
என் மனைவியின் தந்திரம்: தண்ணீர் சிக்கனம் (நீர் மறு சுழற்சி). வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். இது சமுதாயத்தில் மட்ட்ரத்தை ஏற்படுத்தும் என்று எண்ணம் உங்களின் மனதில் உதிக்கும். இதை உங்கள் டைம் லைனில் ஷேர் செய்யலாமே (இதுவும் ஒரு மறு சுழற்சிதான் :0 ).
சிங்கப்பூர் மலேசிய, நெதர்லந்த் இன்னும் pala நடுகளில், நாம் எப்படி தொலை பேசி, மின்சாரம் போன்ற கட்டணம் உபயோகத்திற்கு ஏற்றாற்போல் பணம் செலுத்துகின்றோமோ, அதே போல் தண்ணீர் கட்டணமும் வசூலிக்கபடுகின்றது. அது போல் இந்தியாவிலும் அதி விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை. நமக்கு கிடைத்த இயற்க்கை கொடைகளில் நீரும் ஒன்று.
உலக அளவில் தண்ணீர் தேவை அதிகமாகிவிட்டது. அதற்க்கு பல காரணங்கள் உள்ளது. அதில் ஒரு சில முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
சராசரியாக ஒரு நபருக்கு 30லிட்டர் முதல் 50 லிட்டர் வரை சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க, துணி துவைக்க மற்றும் குளிக்க தேவையான நீரினை குளம் மற்றும் கண்மாய் போன்றவற்றில் இருந்து பயன்படுத்தி வந்தோம். மேலும் பயன்படுத்திய நீர் அப்படியே விவசாயத்திற்கு பயன்படுத்தபட்டது. தற்சமயம் பெரும்பாலான நீர் நிலைகளில் நீர் வற்றி உள்ளது. விவசாய நிலத்தின் அளவு குறைந்ததால் ஆறு, குளம் மற்றும் கண்மாய் போன்றவற்றை முறையாக பராமரிக்க தவறிவிட்டோம். நிலத்தடி நீரை முழுமையாக சேகரம் செய்ய இயலாமல் போனதும் மற்றும் ஒரு காரணம். ஒரு புறம் நீர் வரத்து குறைவு மற்றொரு புறம் நீரின் தேவை இன்னும் அதிகமா உள்ளது.
பெருகிவரும் மக்கள் தொகை முக்கியமான ஒரு காரணி. இந்த சூழ்நிலையில் நாம் பயன்படுத்திய நீரினை மறு சுழற்சி முறையில் பயன்படுவது மாற்று தீர்வாக இறுக்கும். நாம் வழிகாட்டும் மறு சுழற்சி முறைக்கு ஒரு பைசா செலவு இல்லை ஆனாலும் அதனால் நீங்கள் பெரும் நன்மை ஏராளம். உங்களின் ஆர்வம் மட்டும் போதும். நீங்கள் முன்னேறும் பொழுது இந்த சமுதாயம் முன்னேற்றம் அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமும் இல்லை.
1. துணி துவைத்த தண்ணிரை ஒரு வாளியில் சேகரித்து அதை மீண்டும் சிறுநீர் மற்றும் மலம் கழித்த இடத்தை சுத்தம் செய்ய பயபடுதினால் அன்றாடம் தேவைப்படும் நீரின் பயன்பாட்டினை குறைத்து நீரினை சேமிக்க முடியும்.
2. சலவை செய்த நீரினை வைத்து கழிவரையினை சுத்தம் செய்வதினால், அறையானது நல்ல சுத்தத்துடனும், பொலிவுடனும் பளிச்சென்றும் இருக்கும். எனவே கழிவரையினை சுத்தம் செய்வதற்காக தனியாக பினாயில் போன்றவை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது.
3. பெரும்பாலும் நல்ல நீரில் தான் சலவை செய்கின்றோம் எனவே அதில் கிடைக்கும் நீரானது மீண்டும் பயன் படுத்த உகந்ததாக இருக்கும்.
4. உங்கள் வீட்டுக்கு அருகில் இடவசதி இருக்கும் பட்ச்சத்தில் பாத்திரம் கழுவிய பின் வரும் கழிவு நீரினை அருகில் இருக்கும் செடி, கொடிகளுக்கு பாய்ச்சினால் நல்ல சத்து நிறைந்த உரமாக செடிகளுக்கு சென்றடையும் அதே போல் நீர் சுழற்சி செய்தது போல் ஆகிவிட்டது.
#சமூக பணியில் - நியாயம்..? கேள்..!
#நிறுவனர்: சங்கரீஸ்வரன் அழகர்சாமி, மெட்டுக்குண்டு.
#உங்களின் கருத்துக்கு sankareeswaran@gmail.com
No comments:
Post a Comment